யாழில் குப்பைக்குத் தீ வைக்கச் சென்ற இளம் யுவதி பலி



யாழ்ப்பாணம் - சபாபதிப்பிள்ளை இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு அருகில், உடலில் தீப்பற்றிய நிலையில் படுகாயடைந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த பெண் முகாமுக்கு அருகில் இருந்த குப்பைகளுக்கு தீ வைக்கச் சென்ற வேளையே இவ்வாறு விபத்துக்கு முகம்கொடுத்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

இதன்போது படுகாயமடைந்த 23 வயதான குறித்த பெண் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

சுன்னாகம் பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.