பள பளக்கின்றது பட்டினப்பள்ளி அக்கரைப்பற்றில்




கடந்த வெள்ளிக்கிழமை முதல் முஸ்லிம் சமய கலாசார பணிப்பாளர் தலைமையில் அக்கரைப்பற்று பட்டின ஜீம்ஆ பள்ளிவாயலுக்கான புதிய நிருவாகத் தெரிவு இடம்பெற்றது. பிரதித் தலைவராக முன்னாள் கொத்தணி அதிபர் எம்.ஏ.உதுமால்லெப்பை, செயலாளராக அஸ் ஸெய்க் றஹீமதுல்லாஹ், பொருளாளராக ஏ.எல் தவம் ஆகியோருடன் மொத்தமாக 23 மரைக்காயர்மார்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தலைவர் தெரிவு வெகு விரைவில் இடம்பெறவுள்ளது.இதனால் பிரதித் தலைவர் தலைவராக செயற்படுகின்றார்.

றமழானை முன்னி்ட்டு பள்ளிவாயலின் புறக்கிருத்திய தோற்றத்தை அழகுபடுத்தும் சிரமதானம் இன்று அதிகாலை முதல் பொது மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நீண்ட கால இடைவேளையின் பின்னர்,பள்ளிவாயலில் நிறப் புச்சு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதால் பள பளப்புடன் பட்டினப்பள்ளி மிளிர்வதை காணமுடிகின்றது.