இராணுவப் பாதுகாப்பில் ஒரு பகுதியினர் நீக்கம்



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பில் ஒரு பகுதி இராணுவத்தினரை  நீக்கியதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ஸவிற்கு வழங்கப்பட்டுள்ள இராணுவப் பாதுகாப்பு இன்றைய தினம் முற்றாக நீக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதற்குப் பதிலாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் அதிதிகளுக்கான பாதுகாப்பு தொடர்பில் பயிற்சி பெற்ற பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.