
(பின்னிணைப்பு)
தீ அணைப்புப் படையினரால் கட்டுப்படுத்த முடியாத தீயைக் கட்டுப்படுத்த விமானப் படையின் உதவி நாடப்பட்டுள்ளது.
(முகப்புச் செய்தி)
கொஸ்கம சாலாவயிலுள்ள இராணுவ முகாமின் ஒரு பகுதி இன்று மாலை தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ ஏற்பட்டுள்ள பகுதியில் துப்பாக்கி ரவைகள் வைக்கப்பட்டுள்ள களஞ்சியசாலையும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கொழும்பு – அவிசாவெல ஹைலெவல் வீதியின் குறிப்பிட்ட பகுதியின் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ராணுவத் தளபதி சற்று முன் அங்கு விஜயம் செய்துள்ளார். சுடுகலள் துகள்கள் பரவியுள்ளதாகத் தெரிகின்றது. 4KM சுற்று வட்டத்திற்கு அருகில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.

Post a Comment
Post a Comment