(கிசாந்தன்)
அவிசாவளை - கொஸ்கம - சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் காரணமாக, சேதமடைந்த வீடுகளை புனரமைத்துக் கொடுக்க, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் காரணமாக பெரும் தீப்பரவல் ஏற்பட்டது.
மேலும், அப் பகுதியில் இருந்த சில வீடுகளும் இதனால் சேதமடைந்தன.
இந்தநிலையில், குறித்த விபத்தினால் பகுதியளவில் மற்றும் முற்றாக சேதமடைந்த அனைத்து வீடுகளையும் மீள் நிர்மாணம் செய்து கொடுக்க, பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாக, அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.


Post a Comment
Post a Comment