முப்படை வீரர்களுக்கு விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்கும் விருசர வரபிரசாதம் அடையாள அட்டை வழங்கும் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் ஹிங்குராங்கொடை ரஜரட்ட வித்தியாலயத்தில்நிகழ்வொன்று நடைபெறவுள்ளது.
இதுதொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் காரியாலயம் அறிக்கையொன்றை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது. இதுவரை சுமார் 15 ஆயிரம் விருசர வரபிரசாத அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதுடன் நாளை தினம் 1,400 அட்டைகள் வழங்கப்படவுள்ளன. இந்த அடடை ஊடாக முப்படை வீரர்களின் மனைவி, பெற்றோர், உறவினர்கள், பிள்ளைகளுக்கு புலமைபரிசில், இடம் பெற்றுக்கொடுத்தலில் முதலிடம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

