வவுனியா நகரில் வர்த்தகர் கடத்தல்



வவுனியா கோவில்குளத்தில் வர்த்தகரொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வவுனியா தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த வர்த்தகர் நேற்று மாலை 6.30 அளவில் கடத்தப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தமது கடையிலிருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே வர்த்தகர் அவரது வீட்டிற்கு அருகில் வைத்து அடையாளந் தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த நபரை கடத்திய பகுதியில் தொப்பியொன்றும் தலைக்கவசமொன்றும் காணப்பட்டுள்ளதுடன் அது கடத்தப்பட்ட வர்த்தகருடையது என பொலிஸார் கூறினர்.
வேனொன்றில் வந்த குழுவினராலேயே வர்த்தகர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வவுனியாவில் தீவிர சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
கடத்தப்பட்ட நபர் அரிசி ஆலை மற்றும் கடையொன்றின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.