முசலி மீள்குடியேற்ற வீதிகள் இருளில்.அமைச்சர் றிசாத், இது உங்கள் கவனத்திற்கு!



மன்னார் முசலிக்கிராம தெருவிளக்குகள் அனைத்தும் பழுதடைந்துள்ளன. இதனால் வீதிகள் இருளில் மூழ்கியுள்ளன. பிரதேச சபையும் கலைக்கப்பட்டு விட்டது. பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்களுக்கு இவ்விடயம் தெரியாதா அல்லது தெரியாதது போல நடிக்கின்றனரா ? இது நோன்பு காலம் இரவு வணக்கம் அதிகம் செய்யும் காலம். ஆகவே, முசலிக்கிராம வீதிமின்விளக்குகள் மீண்டும் பிரகாசிக்குமா ? இதற்குரிய நடவடிக்கையை எடுக்கும் பொறுப்பு தற்போதைய முசலிப் பிரதேசசபைச் செயலாளரையே சாரும். இது தொடா்பில் வட மாகாண சபையும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது
அமைச்சர் றிசாத் பதியுத்தீன்! இது உங்கள் கவனத்திற்கு!