தாளங்குடாவில் அரச பேருந்தின் மீது தாக்குதல்!



யாழ்பாணத்திலிருந்து வருகைதந்த வாழைச்சேனை டிப்போவுக்கு சொந்தமான அரச பேருந்து ஒன்றின் மீது மட்டக்களப்பு தாளங்குடா இராணுவ முகாமிற்கு அண்மித்த பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலின் காரணமாக பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளன.
அத்துடன், பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளனான பேருந்து, தனியார் பேருந்து ஒன்றுடன் போட்டியிட்டு வந்த நிலையில், ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே குறித்த பேருந்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.