'புளொட்' அமைப்பின் 27ஆவது 'வீரமக்கள் தினம்'



சுவிஸ் சூரிச்சில், 'புளொட்' அமைப்பின் 27ஆவது 'வீரமக்கள் தினம்'.
-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 
சுவிஸின் சூரிச் மாநகரில் இன்று  10.07.2016 ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிவரை புளொட் அமைப்பின் 27வது வீரமக்கள் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
'விடுதலைக்கு உரம் சேர்ப்போம், வீணர்களை புறந்தள்ளுவோம்' என்ற தொனிப்பொருளில் சுவிஸ் பழைய அட்லிஸ்வில் அம்மன் கோயில் மண்டபத்தில் இடம்பெறும்

ஆரம்ப நிகழ்வில் அந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருந்து மரணித்தவர்களுக்காக மலரஞ்சலி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிதிகள் உரை, பொது அறிவுப் போட்டி, பட்டிமன்றம், விநோதவுடைப் போட்டி, பாட்டுக்கு அபிநய ஆட்டம் நடன, நாட்டிய நிகழ்வுகள், இன்னிசை நிகழ்வுகள் உள்ளிட்ட கலையம்சங்கள் நிறைந்த நிகழ்வுகளும் போட்டிகளில் பங்குபற்றியோருக்கு பரிசளிப்புக்களும் இடம்பெறவுள்ளன. தொடர்புகளுக்குளூ 077959 10 10இ  076583 84 10இ  078 916 71 11இ 078 935 46 92இ  077 948 52 14.