மட்டக்களப்பு விமான நிலையத்தில் 317 கோடி ரூபாய் செலவில் உள்ளுர் விமானப் போக்குவரத்து சேவையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (10) ஆரம்பித்து வைத்துள்ளார்.
1958 ஆம் ஆண்டு அரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு விமான நிலையம், 1983 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தகிதி விமான சேவைகள் அமைச்சினால் விமானப் படைக்காகவும் சிவில் பாதுகாப்புக்காகவும் வழங்கப்பட்டது.
1958 ஆம் ஆண்டு அரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு விமான நிலையம், 1983 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தகிதி விமான சேவைகள் அமைச்சினால் விமானப் படைக்காகவும் சிவில் பாதுகாப்புக்காகவும் வழங்கப்பட்டது.
சிவில் விமானப் போக்கு வரத்து சேவையை மேம்படுத்தும் விதமாக இரண்டு விமான சேவைகள் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கொழும்புக்கு இடையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உல்லாசப் பயணத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு உள்ளுர் விமானப் போக்குவரத்து இன்றியமையாதது என கிழக்கு மாகாண முதலமைச்சர், ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரியிடம் வலியுறுத்தியமைக்கு அமைவாக இந்த விமானப் போக்குவரத்து சேவைகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர்அஹமட், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பிரதிமைச்சர் எம்.எஸ். அமீரலி, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், தவிசாளர், பிரதித் தவிசாளர், ஏயார் மார்ஷல் ஜீ.பி. புளத்சிங்ஹல, உட்பட இன்னும்பல அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு விமனா நிலைய புனரமைப்புக்கான நிதியினை இலங்கை விமனாப்படை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு வழங்கியதுடன் இதன் ஓடு பாதை புனமைப்புக்கான நிதியினை வீதி அபிவிருத்தி அதிகார சபை வழங்கியிருந்தது.
நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு விமான நிலையத்திலிருந்து மட்டக்களப்பு கொழும்பு விமானப் போக்கு வரத்துக்கான எம்ஏ.60 எனும் புதிய விமானமும் சேவையில் ஞாயிற்றுக்கிழமை நேற்று தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.இதற்கான புதிய விமானமும் வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு விமான நிலையத்தின் விமான ஓடு பாதை 560 மீற்றராக விஸ்தரிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் அமர்ந்திருந்து சிறப்பாக பயணத்தினை மேற்கொள்ளவசதியாக இருக்கைகள் போடப்பட்டு நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.#Maithripala Sirisena


