ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் இரண்டு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட படக் காட்சிகளில் பல இறந்த உடல்களும், காயமடைந்த பலரும் கிடப்பது தெரிகிறது.
அடிக்கடி பாரபட்சத்திற்கும், வன்முறைக்கும் உள்ளாகும் ஹஸாரா சிறுபான்மை இனத்தினரால் நடத்தப்பட்ட இந்த ஆர்பாட்டத்தில் இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
நாட்டின் மத்தியில் இருக்கும் தங்களின் மாகாணத்துக்கு வெளியே புதிய மின்னிணைப்பு வினியோகப் பாதையை திசை திருப்புகின்ற அரசின் தீர்மானத்திற்கு எதிராக அவர்கள் இந்த ஆர்பாட்த்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

