புனரமைப்புச் செய்யப்பட்டுள்ள இந்த மைதானத்தினை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் புராதன முக்கியத்துவம் வாய்ந்த ஓர் விளையாட்டு மைதானமாக வெபர் விளையாட்டு மைதானம் விளங்குகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் புராதன முக்கியத்துவம் வாய்ந்த ஓர் விளையாட்டு மைதானமாக வெபர் விளையாட்டு மைதானம் விளங்குகின்றது.
குறித்த வெபர் விளையாட்டு மைதானம், சுமார் 10 ஏக்கர் விசாலமான காணியில் உள்ளக அரங்கு, வெளி அரங்கு என சகல வசதிகளையும் கொண்ட நவீன விளையாட்டு அரங்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டு வெபர் விளையாட்டுக் கட்டடத் தொகுதியை அபிவிருத்தி செய்யவென வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
எனினும் அந்த வேலைத்திட்டம் இரண்டு வருடங்களுக்கும் மேலாகக் கைவிடப்பட்டிருந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் முயற்சியினால் விளையாட்டு அமைச்சிடமிருந்து மேலதிக நிதி பெறப்பட்டு மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமாரின் மும்முரமான செய்பாடுகளுடன் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
201.26 மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வெபர் விளையாட்டு மைதானத்தில், 400 மீற்றர் ஓடு தளம், கூடைப் பந்தாட்டக் கூடம், உதைப் பந்தாட்ட மைதானம், நீச்சல் தடாகம், கரப்பந்தாட்ட கூடம், பட்மின்ரன் தளம் என அனைத்து விதமான விளையாட்டுத் தளங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

