இனவாதத்தினால் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் தலைவர் தற்பொழுது, ஆட்சியைப் பிடிக்க இனவாதம் பேசி வருகின்றார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மெதமுலன இல்லத்துக்கு சென்று யன்னல் கம்பியில் தொங்கியவாறு, அங்கிருந்த மக்களிடமும் ஊடகங்களிடமும் சொன்ன செய்தி, “தான் சிறுபான்மையினரின் வாக்கு கிடைக்காமையினால் தோல்வியடைந்தேன்” என்பதாகும்.
இவ்வாறு சொன்ன அவர் தற்பொழுது ஆட்சியைப் பிடிப்பதற்காக, இனவாதத்தை தூண்டும் விதமாக செயற்பட்டு வருகின்றார். இதற்கு எதிராகவே நாம் இன்று தேசியக் கொடியை கையில் ஏந்த வேண்டியுள்ளது எனவும் பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றும் போது அவர் மேலும் கூறினார்.

