ஜனாதிபதியின் பதாகையினை உடைத்த தேரர்



(Daily Ceylon)
மட்டக்களப்பு மங்களா ராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி சமூகமளிக்காததால் கோபமடைந்த குறித்த விகாரையின் விகாராதிபதி, ஜனாதிபதியின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுப் பதாகையை உடைத்து தரைமட்டமாக்கிய சம்பவம் ஒரு இன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி மைத்திபால சிறிசேன இன்று (10) மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்த அதேவேளை, குறித்த நிகழ்வில் பங்கேற்றிய மட்டக்களப்பு மங்களா ராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், தமது விகாரைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதன்போது தம்மால் கலந்துகொள்ள நேரகாலம் போதாது என ஜனாதிபதி தன்னிடம் கூறியதாக விகாராதிபதி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மங்களா ராம விகாரையில் சேதமடைந்த “புதுமெதுர” புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, 27-10-2015 அன்று திறந்து வைக்கப்படவிருந்த நிலையில், அப்போது காணப்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக குறித்த நிகழ்வில் ஜனாதிபதியால் கலந்துகொள்ள முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
என்றாலும் அதன் பின்னர் பல தடவைகள் ஜனாதிபதி மட்டக்களப்பிற்கு வருகை தந்தபோதும், தமது விகாரைக்கு சமூகமளிக்கவில்லை என விகாராதிபதி குற்றம்சுமத்தியுள்ளார்.
மட்டக்களப்பு நகரில் காணப்படும் ஒரே ஒரு பௌத்த விகாரைக்கும் ஜனாதிபதியால் சமூகமளிக்க முடியாவிட்டால், அவருடைய பெயர் பொறிக்கப்பட்ட நினைவுப் பதாகையை தொடர்ந்தும் வைத்திருப்பத்தில் எவ்விதப் பயனும் இல்லை என்பதால், தான் குறித்த நினைவுப் பதாகையை உடைத்து தரைமட்டம் ஆக்கியதாக மங்களா ராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.