மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையில் மாதாந்த இறுதிப் புதன் விசேட மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம் புதன்கிழமை மாலை 5 மணியளவில் துறை இணைப்பாளர் ஏ.ரவிச்சந்திரன் வழி நடத்தலில் நடைபெற்றது.
கலாசாலை முதல்வர் ஏ.எஸ்.யோகராஜா பிரதம அதிதியாகவும், பிரதி முதல்வர் பரமேஸ்வரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்ட இந்த நிகழ்வின் போது ஆரம்பிப்பிரிவு கற்கை நெறி ஆசிரிய மாணவர்களின் நிகழ்வுகள் இடம்பெற்றன.
மாணவர்களின் கலை நிகழ்வுகள், சிறுவர் அரங்கை மையப்படுத்திய சிறுவர் பாடல், கதை கூறல, கதைப்பாடல், நடனம், நாட்டியம், ஒற்றுமையயே பலம் என்னும் சிறுவர் நாடகமும் இடம் பெற்றது.
கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா கலை நிகழ்வுகளை நெறிப்படுத்தியிருந்தார். நிகழ்வுக்குப் பொறுப்பாக விரிவுரையாளர் கே.கோமளேஸ்வரன் கடமையாற்றினார்.

