தெரிவு செய்யப்பட்டோருக்கு சீமெந்துகள்



(க.கிஷாந்தன்)

அம்பகமுவ பிரதேச பகுதியில் காணப்படும் தோட்ட பகுதிகள் மற்றும் கிராம பகுதிகளில் மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக மற்றும் ஏனைய பொது அமைப்புகள் ஊடாகவும் தமது சொந்த செலவிலும் அமைத்துக் கொண்ட தனி வீடுகளுக்கு அவ்வீட்டினை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களை இனங்கண்டு அவர்களின் வீடுகளை முழுமையாக பூர்த்தி செய்து கொள்ளவென தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் ஆகியோரின் வேண்டுக்கோளுக்கமைவாக அமைச்சர் சஜித் பிரமதாஸவின் வீடமைப்பு அமைச்சின் கீழ் வழங்கப்பட்ட சீமெந்து பக்கட்கள் கையளிக்கும் வைபவம் 16.07.2016 அன்று கினிகத்தேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதில் வறுமையை எதிர்நோக்குபவர்களில் இனங்காணப்பட்ட 102 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு 1100 சீமெந்து பக்கட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர் உட்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், தொழிலாளர் தேசிய சங்க பொது செயலாளர் எஸ்.பிலிப்குமார், அமைச்சின் இணைப்பு செயலாளர் ஜீ.நகுலேஸ்வரன், அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரி பழனி விஜயகுமார், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட கொடிகளையும் அமைச்சர் மற்றும் ஏனையோர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடதக்கதுnjup