மின்சாரம் தாக்கி ஜேர்மன் குழந்தை உயிரிழப்பு



சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த ஜேர்மன் நாட்டின் சிறு பிள்ளை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

ஜேர்மன் நாட்டின் இலாய்ட் ஹெண்டரின் என்ற 1 வருடமும் பத்து மாதங்களான குழந்தை ஒன்றே உயிரிழந்துள்ளது. 

வென்னப்புவ, வய்க்கால பிரதேசத்தில் நேற்று இரவு 10.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

உயிரிழந்த குழந்தை பெற்றோருடன் சுற்றுலாவிற்காக இலங்கைக்கு வந்து குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளனர். 

பெற்றோர் இரவு உணவு உட்கொண்டிருந்த போது குழந்தை கீழே விளையாடிக் கொண்டிருந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

இதுன்போது மின்சாரம் தாக்கிய குழந்தை தங்கொட்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது. 

பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளதுடன், வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.