அரசியல் திருமணம்



மாகாண சபை உறுப்பினர் சமன்மலி சகலசூரியிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் மகன் யதாமினி குணவர்தனவிற்கும் இன்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் திருமணம் நடைபெற்ற்து.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஆளும், எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு கண்டியில் நடைபெற்ற மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் கூட்டமொன்றின் போது இருவரும் காதல் கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.