கிளிநொச்சி – பூநகரி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சங்குப்பிட்டி பாலத்திற்கருகே விபத்திற்குள்ளாகி கடலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.
சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் நள்ளிரவு இந்த விபத்து நேர்ந்துள்ளது.
கடலில் வீழ்ந்த இருவரில் ஒருவரது சடலம் ஏற்கனவே மீட்கப்பட்டிருந்த நிலையில், மற்றைய நபரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.
சடலம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா இன்று காலை மரண விசாரணைகளை நடத்தினார்.
உயிரிழந்த இருவரில் ஒருவர் யாழ்ப்பாணம் பகுதியையும் மற்றைய நபர் குருநாகல் பகுதியையும் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதுடன், இந்த மரணங்கள் தொடர்பில் பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

