அரசியல்வாதிகளினாலும் ஏற்படுத்தப்பட முட்டுக்கட்டைகள். இடைஞ்சல்கள், வரலாற்றுத்துரோகம் பற்றியும், இந்த அபாயகரமான நிலை தொடர்பில் சகல மட்டத்தினரும் விழிப்புணர்ச்சி பெற வேண்டுமென்ற நோக்கிலும் சில தகவல்களை பகிர்ந்து கொள்ள விளைகிறேன்.
கடலரிப்புப் பற்றி கிராமத்தின் சார்பாக ஆவணப்படுத்தப்பட்ட அறிக்கையினை அரச தலைவர்களுக்கு எமது வேண்டுகோளாகச் சமர்ப்பிக்க வேண்டுமென ஒரு பதிவினையிட்டிருந்தேன்.
அவ்விடயத்தினை தாங்கள் முன்னின்று செய்ய முடியாதா? என என்னிடம் சில நண்பர்கள் கேட்டனர்.
அதனால், கடந்த காலங்களில் எம்மால் எடுக்கப்பட்ட முயற்சிகளையும், அதற்கெதிராக கொந்துராத்துக்காரர்கள் செய்த வரலாற்றுத் துரோகத்தினையும் இவ்விடத்தில் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன்.
நாங்கள் மீனவர்களின் ஒத்துழைப்புடன் 2008 ம் ஆண்டு துறைமுகத்தினால் எமது கிராமமே அழிந்து விடும் நிலைமை ஏற்பட்டுள்ளதென ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிப்பதர்காக அல் ஹம்றா மகா வித்தியாலத்தில் அம்பாரை மாவட்ட புத்திஜீவிகளை அழைத்து அம்பாரை கரையோர மக்களின் வேண்டுகோளாக முன்வைக்க ஏற்பாடு செய்தோம்.
கூட்டம் நடைபெறுவதற்கு 30 நிமிடங்களுக்குள் கூட்டத்துக்கு வந்து கொண்டிருந்த பிரமுகர்கள் சீனம பிட்டி சந்தியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல் கிடைத்தது. அதே நேரம், பாதையில் குறிப்பிட்ட சிலர் பதாதைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் நின்றனர்.
ஜனாதிபதிக்கெதிராக கூட்டம் கூட்டுவதாவும், துறைமுக அபிவிருத்தியை தடுத்து நிறுத்தப் போவதாகவும் எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களது உள்ளாடைகளைக் காட்டி அநாகரிகமான முறையில் பாதையில் கூக்கரலிட்டனர்.
இந்நிலையில், சமூகம் தந்த பிரமுகர்கள் கூட்டம் நடாத்த ஆயத்தமாக இருந்தனர்.
இதனைப் பயன்படுத்திய அன்றைய அரசியல்வாதி பொலிசாரை வரவழைத்தார். எங்களுக்கும் பொலிசாருக்குமிடையில் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன. பொலிசார் கூட்டத்தினைக் கலைத்ததோடு, முன்னிலையில் நின்ற எங்களில் ஐந்து பேருக்கெதிராக அவர்களால் வழக்குப் பதியப்பட்டு ஒரு வருட காலம் கோடும், பொலிஸ் நிலையமுமாக அலக்களிக்கப்பட்டோம்.
இதனால், பல மாத காலமாக இதற்கான ஏற்பாடுகளில் எங்களுடன் ஈடுபட்டிருந்த அணி திசை மாறியது.
இதனைத்தடுக்க காரணமாக அன்று துறைமுக கட்டுமாணப் பணிகளில் கூலிக்கு பணி புரிந்த சில பச்சோந்திகளும், அங்கு கொந்தராத்துப் பணியில் ஈடுபட்ட சில துரோகிகளுமே.
ஆட்சி, அதிகாரம் எங்களைச் சார்ந்த கட்சிக்கு இல்லாததனால் எங்களது குரல் நசுக்கப்பட்டடது. இது பற்றி முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குத் தெரிவித்தோம்.
இன்று ஆட்சி, அதிகாரம் எல்லாம் நாம் நேசித்த கட்சிக்கு வந்துள்ளது. எனவே, இவ்விடயத்தினை வாய்ப்பேச்சோடு நின்று விடாது, ஆவணப்படுத்தி எமது பிரச்சினையினைப் பூசிமெழுகாது உரத்து நாம் சொல்ல வேண்டும்.
வெளிநாட்டிலிருக்கும் எனக்கு இப்படி ஒரு கருத்தின் பால் அழைப்பதைத் தவிர, என்னால் எதையும் செய்ய முடியவில்லை.
இருப்பினும், இது பற்றி தேசிய பத்திரிகையான தினக்குரலுக்கு மனக்குமுறலை கட்டுரையாக வடித்துள்ளேன். பல வெப்தளங்களுக்கும் ஒலுவில் கிராமத்தின் இன்றைய அபாயகரமான நிலை பற்றிய ஆதங்கத்தினை ஆதாரங்களுடன் கட்டுரையாக வெளிப்படுத்தியுள்ளேன்.
நாம் பள்ளியில் தொழுது விட்டு, முன்னாலுள்ள கத்தா மர நிழலின் கீழ் நின்று ஆதங்கங்களை கொட்டி விட்டு, தீர்மானமின்றிக் கலைந்து செல்வது போல் பேஸ்புக் சந்தியில் கருத்தை சொல்லி விட்டு நகரக்கூடாது என்பதே எனது விருப்பம்.

