ராவணா பலயவை சந்தித்த மஹிந்த



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கடும்போக்கு பௌத்த அமைப்பான ராவணா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் ஆகியோருக்கு இடையில் அவசர சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டு வெளிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சுகம் விசாரிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதியும் நாமலின் தந்தையுமாகிய மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலை சிறைச்சாலைக்கு விஜயம் செய்திருந்தார்.
இதன்போது விமல் வீரவங்சவின் கட்சி ஊடகப் பேச்சாளர் முகம்மத் முஸம்மிலை சுகம் விசாரிப்பதற்கு இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரரும் வருகை தந்திருந்ததார்.
இதன்போதே குறித்த சந்திப்பு சில நிமிடங்கள் நடைபெற்றுள்ளது. அதேவேளை சிறைச்சாலையிலிருந்து வெளியே வரும் போதும் இருவரும் சில நிமிடங்க கலந்துரையாடியது ஊடகவியலாளர்களின் கேமராக்களிலும் பதிவாகியுள்ளது.
ராவணா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் விமல் வீரவன்சவின் குடும்ப மதகுரு என்பதோடு, விமல் வீரவன்ச அமைசகராக இருந்த காலத்தில் சத்தாதிஸ்ஸ தேரரின் ராவணா பலய அமைப்புக்கு அமைச்சுக்கு சொந்தமான ஏழு வாகனங்களை வழங்கி குறித்த அமைப்பை முன்னின்று வழிநடத்தி வந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.