பஸ் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி



பஸ் கட்டணங்களை ஆறு வீதத்தால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை இன்று அனுமதி வழங்கியுள்ளது. 

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி முதல் அமுலாகும் வகையில் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

வருடாந்த கட்டண திருத்தத்திற்கு அமைவாக நிபுணர் குழுவினரால் அதிகரிப்பு வீதம் தயாரிக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது. 

3.2 வீதமாக பண்கட்டணத்தை அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு முன்வைத்த யோசனையை பஸ் சங்கங்கள் நிராகரித்திருந்தன.