நிதியை மோசடி செய்தமைக்காக நாமல் கைது



பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் கைது எந்த வகையிலும் அரசியல் நோக்கம் கொண்டதல்ல எனவும், பொது மக்களின் நிதியை மோஷடி செய்தமைக்காக அவருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க தெரிவித்தார்.
அரசுக்கு செல்ல வேண்டிய நிதி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் கைக்கு சென்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது அரசியல் நோக்கம் எனக் கூற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற துண்டுப் பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.