(சுஹைப் உமறுலெப்பை)
காபட் வீதியாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது அக்கரைப்பற்று - அம்பாரை பிரதான வீதி.
★★★★★★★★★★
★★★★★★★★★★
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் Anuradapura Sun Construction கம்பனியினால் அக்கரைப்பற்று அம்பாரை பிரதான வீதி, பராமரிப்புத் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று மணிக்கூட்டு கோபுரச் சந்தியிலிருந்து எதுவித மாற்றங்களும் நிகழாத வகையில், 8 கிலோ மீற்றர் காபட் வீதியாக தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இதன் முதற்கட்டமாக அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பில் அமைந்துள்ள அதாஉல்லாஹ் விளையாட்டு மைதானத்திற்கு முன்னால் உள்ள அம்பாரை வீதியில் 2016.07.21 வியாழக் கிழமை பி.ப.12.30 மணியளவில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று அதிகாரிகளினால் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதன் போது ஏராளமான பொது மக்கள் சுட்டெரிக்கும் வெயில் என்றும் பாராது அவ்வீதி அபிவிருத்தி வேலைகளினைப் பார்வை இட்டனர்.

