#கொட்டகல ; திறந்து வைப்பு





(க.கிஷாந்தன்)
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமணி பிரசாந்தின் வேண்டுக்கோளுக்கு இணங்க நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிளாலர் காங்கிரஸின் பொதுச்செயளாலருமான ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைய கொட்டகலை சத்திபுரம், வணிகசேகரபும், லொக்கில், ரொசீட்டா ஆகிய வீடமைப்பு திட்டத்திற்கான பாதைகள் மத்திய மாகாண விவசாயதுறை மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் எம்.ரமேஸ் அவரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக 30.07.2016 அன்று இ.தொ.கா பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் இ.தொ.காவின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், இ.தொ.காவின் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான பி.சக்திவேல், கணபதி கனகராஜ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவி அனுஷியா சிவராஜா மற்றும் இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமணி பிரசாந்த் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.