பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையிலேயே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஸ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதையடுத்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இரண்டு தனியார் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்கு மூலத்தினை வழங்குவதற்கு நாமல் ராஜபக்ஸ பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவில் இன்று முற்பகல் அவர் ஆஜராகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

