(துருக்கியின் ஜனாதிபதி)
#அர்துகானின் ஆட்சிக்கு எதிராக #துருக்கிய இராணுவம் சதி முயற்சி.
______________________________ ________________
#பின்னணியில்
:#அமெரிக்கா_இஸ்ரேல்_எமிரேட்ஸ்_ பத்ஹுல்லாஹ்கோலான்.
#தக்ஸீம் மைதானத்திற்கு மக்களை ஒன்று கூடுமாறு துருக்கியின் ஜனாதிபதி #அர்துகான் அழைப்பு.
தற்போது உள்ள துருக்கியின் ஆட்சிக்கு எதிராக துருக்கியின் இராணுவத்தின் சிலர் சதிபுரட்சியில் இறங்கியுள்ளனர். துருக்கிய ஜனாதிபதி #றஜப்தையுப் அர்துகான் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தைப்பார்த்து அவர்கள் துருக்கியின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகக் வேண்டும் என்ற நோக்கில் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளதாக துருக்கியின் சில ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் . மேலும் அவர்கள் ஊரடங்குச் சட்டமும் பிரப்பித்துள்ளனர்.
இதைப்பற்றி துருகியின் ஜனாதிபதி #றஜப்தையுப் அர்துகான் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் #அதிகாரத்தை சில கையில் எடுத்தது மகாதவறு அவர்கள் செய்தது தேசதுறோகம் என்றும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வளங்கப்படும் என்றும் அவர் கூறினார் . அவர் மேலும் கூறுகையில் இந்தப் புரட்சிக்குக் காரணம் #பத்ஹுல்லாஹ் கோலானும் அவருக்கு ஆதரவான ஒரு சில துருக்கிய இராணுவ அதிகாரிகளுமே காரணம் என்று அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இன்று இஸ்லாமிய உலகில் இடம்பெற்றுவரும் அரபு வசந்தத்தை ஆதரிக்கும் ஒரு இஸ்லாமிய நாடு என்றால் அது #துருக்கியே ஆகும். அதேபோல் #பலஸ்தீன் விடையத்திலும் #சிரியாவிடையத்திலும் கூடுதலாக ஆதரவு வழங்கிய நாடும் இதுவே ஆகும் . இதற்க் கவனத்திற் கொண்டு இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் எமிரேட்ஸ் துருக்கி #பத்ஹுல்லாஹ் கோலானுடன் இணைந்து சதி செயதுள்ளனர் என்று துருக்கிய நீதிபதி ஒரு கருத்து வெளியிட்டுள்ளார் .
தற்போது துருக்கிய இராணுவப் புரட்சி தோல்வியடைந்து விட்டது துருக்கிய இராணுவ சதியை துருக்கிய மக்கள் மற்றும் பொலிசா சேர்ந்து தோல்வியுற வைத்துள்ளார்கள் .

