மது, புகைத்தல் பழக்கமில்லாத இரு தலைவர்களை நாடு பெற்றுள்ளது-தேரர்



எமது நாடு  மது, புகைத்தல் என்பவற்றிலிருந்து விலகியுள்ள  ஜனாதிபதியையும், பிரதமரையும் கொண்டிருப்பது பெரும் பாக்கியமாகும் என கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம சபையின் மகாநாயக்கர் கலாநிதி இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரர் தெரிவித்தார்.
இலங்கை மது ஒழிப்புச் சபையின் 104 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வு பி.எம்.ஐ.சி.எச். இல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் கூறினார்.
கடந்த அரசாங்கம் போதைக்கு முற்றுப் புள்ளி என்ற நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்தது. இதற்காக பல கோடி ரூபாவை செலவு செய்தது. ஆனால், பிரதிபலன் என்னவென கேட்கவேண்டியுள்ளது. இதனைக் கூறும் போது சிலருக்கு கஷ்டமானதாக இருக்கும் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.