தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்



அம்பாறை – ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர அண்மையில் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் சம்மாந்துறை பிரயோகபீட மாணவர்களும் பல்கலைக்கழகத்திலிருந்து பேரணியை ஆரம்பித்தனர்.
பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் பேரணியாக பிரதான வீதியை வந்தடைந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.