#டெங்கு ஒழிப்பு : 3 நாள் வேலைத்திட்டம்



டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை அடையாளம் காண்பதற்காக 3 நாட்கள் விசேட வேலை திட்டத்தை இன்று முதல் ஆரம்பிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டத்திற்கு 165 குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவின் வைத்தியர் ப்ரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் மழையுடன் கூடிய வானிலை நிலவுக்கின்ற போது டெங்கு நுளம்புகள் பரவுவது அதிகரிக்க கூடும் என அவர் மேலும் தெரிவித்தார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 23,000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிகப்படியாக டெங்கு நோயாளர்கள் உள்ள மாவட்டங்களாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருணாகல்,கண்டி, மாத்தளை, காலி, மாற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.