(க.கிஷாந்தன்)
பொகவந்தலாவ - கொக்கஸ்வோல்ட் மேற்பிரிவு தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த எட்டுப் பெண் தொழிலாளர்களும் கெம்பியன் தோட்ட பகுதியில் 13 பெண் தொழிலாளர்களும் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இவர்கள், பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட 21 பேரில் 16 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதோடு, ஏனைய அறுவர் தொடர்ந்தும் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்

