ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாளை முன்னெடுக்கவிருந்த பாத யாத்திரைக்கு இரண்டு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
கண்டி நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவிற்கு அமைய, இந்த பாத யாத்திரையைக் கண்டி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆரம்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாத யாத்திரையின் ஏற்பாட்டாளர்கள் கண்டி ஶ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு கண்டி பிரதம நீதவான் புத்திக சி ராகல அனுமதி வழங்கியுள்ளார்.
இதேவேளை, மாவனெல்ல நீதவான் நீதிமன்றமும் இந்த பாத யாத்திரை தொடர்பில் தடை உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
இதற்கமைய, பாத யாத்திரையை மாவனெல்ல நகர் ஊடாக மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை உத்தரவுகள் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, கெஹெலிய ரம்புக்வெல்ல, திலும் அமுனுகம மற்றும் லொஹான் ரத்வத்தே ஆகியோருக்கே பிறப்பிக்கப்பட்டுள்ளன.

