இலங்கையின் முதலாவது சதுப்பு நிலக்காடுகள் அருங்காட்சியகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
மகாவலி அபிவிருத்தி அமைச்சு, கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு, seacology நிறுவனத்துடன் இணைந்து இந்த அருங்காட்சியகத்தை நிர்மாணித்துள்ளது.
சிலாபம் – பம்பல பிரதேசத்தில் இந்த அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சதுப்பு நிலக்காடுகள் பாதுகாப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், அதனை முன்னிட்டு ஓவியப் போட்டியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

