கைதிக்கூண்டில் ஜாக்கிர் நாயக்?




(இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்)

ஜாகிர் நாயக் 1965 ஒக்டோபர் திங்கள் 18 இல் மும்பையில் பிறந்தார்.தொழில் ரீதியில் மருத்துவரான இவர்,  இஸ்லாமிய ஆய்வு மைய ஸ்தாபக தலைவராகத் தொழிற்படுகின்றார். இவரது சன்மார்க்கப் பிரச்சாரங்கள் யாவும் " Peace TV” இன் ஊடாகவே முன்னெடுக்கப்படுகின்றன.100 மில்லியன் மக்கள் அதன் பார்வையாளர்கள். 
இஸ்லாத்தின் அடிப்படை அறிவினை அல்குர்ஆனின் போதனையினையும் நபியவர்களின் முன்மாதிரியையும் ஏனைய மதத்தவருக்கு மிருதுவாகப் போதித்து பல்வேறு மாற்று மதத்தினரையும் இஸ்லாத்தின் பால் ஈர்த்தவர். இஸ்லாமிய பாரம்பரிய ஆடையினை அணியாது, வெள்ளையரின் ஆடையணிந்து, வெள்ளளைக்காரனின் ஆங்கில மொழியில் இஸ்லாத்தினை எத்திவைக்கும் முதல் நபர்.

Tokoh Ma'al Hijrah Distinguished Personality International Award of 2013Dubai International Holy Quran Award's 'Islamic Personality of 2013,The Insignia of the Commander of the National Order of the Republic of The Gambia   2014, 2015ல் King Faisal International Prize  விருதினையும்,  இஸ்லாமிய பிரச்சாரத்துக்காகப் பெற்றவர்.

உலக புகழ் இஸ்லாமிய பிரச்சாரகர். ”இஸ்லாமும் நவீன விஞ்ஞானமும், ”இஸ்லாமும் கிறிஸ்தவமும்”, ”இஸ்லாமும் பிற  மதங்களும்” போன்ற தலைப்புக்களில் சன்மார்க்க விவாதங்களில் ஈடுபடுவர்.
2010ல் ஐக்கிய ராச்சியம், கனடா போன்ற நாடுகள் இவர் அங்கு செல்வதைத் தடை செய்திருப்பினும்,2014 ல் பல அவுஸ்திரேலியா சென்ற இவர் இஸ்லாத்தில் பெண்களுக்கான உரிமை என்ற தலைப்பில் வாதிட்டதுடன், பெண்களின் ஆடைக் குறைப்புக்கள், பல்வேறுபட்ட துஸ்பிரயோகத்துக்கும் அவர்கள் ஆட்படக் காரணம் என்று தெரிவித்ததார்.
புதிய சர்ச்சை
வங்கதேசத் தலைநகர் டாக்காவில், கடந்த வாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இந்தியர் ஒருவர் உட்பட பலர் பலியானார்கள். இந்தத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவன் இஸ்லாமிய பிரச்சாரகர் ஜாகிர் நாயக் பேச்சில் தான் கவரப்பட்டதாகக் கூறியுள்ளான் எனக்கூறி ஜாகிர் நாயக் தீவிரவாதத்தைத் தூண்டுவதாக அவர் மீது மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜாகிர் நாயக் குறித்து அனைத்து விவரங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது என்றும், அவரது பேச்சு ஆட்சேபனைக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, இந்தியாவின் NDTV தனது நேரலை நிகழ்சியில், ஜாக்கிர் நாயக்  பற்றிய தவறான தகவல்களைப் பரப்பி, மக்களைக் கருத்தறியும் செயற்பாட்டினையும் செய்து வருகின்றது.
இது ஜாகிர் நாயக் அவர்களின் இஸ்லாமியப் பிரச்சாரத்தை முடக்குவதற்கு பாஜக அரசு செய்யும் அப்பட்டமான சதிச்செயல்என்பதில் சந்தேகம் இல்லை. அனைத்து ஆங்கில செய்திச்சேனல்களும் ஜாகிர் நாயக் அவர்களை மிகப்பெரிய தீவிரவாதியைப் போல சித்தரித்து விவாத அரங்கங்களை நடத்திக்கொண்டிருக்கின்றன.
பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி ஜாகிர் நாயக்கின் சொற்பொழிவை கேட்பவனாக இருந்ததால் ஜாகிர் நாயக் தீவிரவாதியாக ஆகிவிடுவாரா?
அப்படியானால் எவ்வளவோ திருடர்கள், கொள்ளைக்காரர்கள் சினிமா நடிகர்களைப் பின்பற்றுகின்றனர். அதற்காக சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் நடித்த திரைப்படங்களையும், அவர்களது உரைகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்வதாக வெங்கய்யா நாயுடு சொல்வாரா ?
இவ்வளவு ஏன் சுவாதி கொலை குற்றவாளி ராம் குமார் என்பவன் மோடியினுடைய பக்கத்தை லைக் செய்து வைத்துள்ளான். அதனால் சுவாதி கொலைக்கு மோடிதான் காரணம் என்று வெங்கய்யா நாயுடு சொல்வாரா?
தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட ரோகன் இம்தியாஸ் கடந்த வருடம் இறுதியில் ஜாகிர் நாயக் ஒரு உரையில் பேசிய பேச்சுக்களை மேற்கொள்காட்டி பேஸ்புக்கில் பிரச்சாரம் மேற்கொண்டதனால்தான் ஜாகிர் நாயக்கை குற்றவாளியாக பார்க்கின்றார்களாம்.
I said every Muslim should be a terrorist to all anti social elements.
இதுதான் ஜாகிர் நாயக் அவர்கள் பேசிய வாசகம். இதன்பொருள், ஒரு முஸ்லிம் என்பவன் அனைத்து தீமைகளுக்கு எதிராக போரிடும் விஷயத்தில்தீவிரவாதியாக இருக்க வேண்டும்.
மேற்கண்ட வாசகத்தில் என்ன தவறு இருக்கின்றது. மேற்கண்ட வாசகத்தைக் கூறியதற்காகத்தான் அவர் தீவிரவாதி என்று முத்திரை குத்தப்பட்டு அவரது இஸ்லாமிய பிரச்சார குரல் வளை நெறிக்கப்படும் என்றால் இதே வாசகத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் பிரகடனப்படுத்துகின்றது.
ஒரு முஸ்லிம் என்பவன் மனிதநேயத்தைப் போதிப்பதில் தீவிரவாதியாக இருக்க வேண்டும்.
ஒரு முஸ்லிம் என்பவன் தீமைகளை எதிர்ப்பதில் தீவிரவாதியாக இருக்க வேண்டும்.
ஒரு முஸ்லிம் என்பவன் அன்பைப் போதிப்பதில் தீவிரவாதியாக இருக்க வேண்டும்.
ஆகமொத்தத்தில் ஒரு முஸ்லிம் என்பவன் நன்மைகளைச் செய்வதில் தீவிரவாதியாக இருப்பான். அவன் தான் உண்மையான முஸ்லிம்.

இஸ்லாமியரல்லாத மக்கள் மத்தியில் இஸ்லாத்தைப் போதிக்கும் எவரும் தீவிரவாதத்திற்கு ஆதரவாகச் செயல்படமாட்டார். அவ்வாறு செயல்படுவது அந்தப் பிரச்சாரத்திற்கு முழு முட்டுக்கட்டையாகத்தான் இருக்குமே தவிர அதன் வளர்ச்சிக்கு உதவாது.
ஜாகிர் நாயக் அவர்கள் இஸ்லாமியரல்லாத மக்கள் மத்தியில் செய்து வரும் தீவிரப்பிரச்சாரத்தை தீவிரவாத பிரச்சாரமாகக் காட்ட இந்திய அரசு முயன்று வருகின்றது.
ஓசாமா பின் லாதினைத் தனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாது. அவரது கோட்பாடு பற்றித் தெரிந்திருந்தால்,அவர் உண்மையாக .இஸ்லாத்தின் எதிரிகளுடன் போரிடுவதாக இருந்தால், தான் அவருடன் இருப்பேன் என்று ஜாக்கிர் நாயக் அன்று சொன்னது, விமர்சிக்பட்ட அளவுக்கு, பயங்கரவாதத் தாக்குதல்களை எதிரக்கின்றேன், ஒரு அப்பாவியினைக் கொல்வது, மொத்த மனிதமும் கொல்லப்டுலதற்குச் சமம் என அவர் தெரிவித்த கருத்துக்கள், மாற்று மதத்தவர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.  ஜாக்கிர் நாயக் பயங்கரவாதம் பற்றிய கருத்துக்கள் பின்வருமாறு!

Naik's views and statements on terrorism have at times been criticised in the media. Speaking of Osama bin Laden, Naik stated in a YouTube video that he would not criticise bin Laden because he had not met him and did not know him personally. He added that, "If bin Laden is fighting enemies of Islam, I am for him," and that "if he is terrorizing America – the terrorist, biggest terrorist – I am with him. Every Muslim should be a terrorist. The thing is that if he is terrorizing the terrorist, he is following Islam. Whether he is or not, I don't know, but you as Muslims know that, without checking up, laying allegations is also wrong."[57] When Time hinted that this remark could have inspired Najibullah Zazi's terrorist activities, Naik insisted: "I have always condemned terrorism because, according to the glorious Quran, if you kill one innocent person, then you have killed the whole of humanity".[57]
In 2010, Naik said that he had been quoted out of context regarding the remarks on terrorism. "As far as terrorist is concerned", he said, "I tell the Muslims that every Muslim should be a terrorist.... What is the meaning of the word terrorist? Terrorist by definition means a person who terrorises. So in this context every Muslim should be a terrorist to each and every anti-social element. I'm aware that terrorist is more commonly used for a person who terrorises innocent human beings. So in this context no Muslim should ever terrorise a single innocent human being."[58]
In a lecture delivered on 31 July 2008 on Peace TV, Naik commented on the attacks of 11 September: "it is a blatant, open secret that this attack on the Twin Towers was done byGeorge Bush himself".[59]
He has also attracted much publicity for declaring that "even a fool will know" that the 9/11 attacks were "an inside job" orchestrated by US President George W. Bush.
எது எவ்வாறினும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடெனக் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள எத்தனிக்கும் இந்தியா, கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர, மாற்றுக் கருத்துக்களைச் சொல்லிவிட்டார் என்பதற்காக கைது செய்ய எத்தனிப்பது கண்மூடித்தனம். இந்தியாவின் ஏதாவது ஒரு சட்டத்தினை வைத்து உள்ளே தள்ளுவோம் என, இந்திய தற்பேதைய அரசு எண்ணினால், பாபர் மசூதியினை அன்று இடித்து பாரதீய ஜனதாஈ அரசியல் அரங்கில் இருந்து பின் தள்ளப்பட்டேதோ, சர்வதேச அரங்கில் சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும்.