அக்கரைப்பற்று கடற்கரை வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் அமைக்கப் பட்டிருந்த மரத்தாலான மேற்பரப்பு திடீரென உடைந்து விழுந்ததில் அதன்மேல் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களில் பலர் காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
மாணவர்இ ஒருவர் இதுபற்றித் கருத்துத் தெரிவிக்கும்போது,பழைய மாணவர் வட்டம் ஒன்றின் இராப்போஷண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நாங்கள் அங்கு சென்றபோது உணவக உரிமையாளர் 100 பேர் மேலே உட்காரலாம் என்று கூறியமையினால் நாங்கள் மேலே 25 பேர்தான் ஏறினோம். ஆனால் சாப்பாடு முடியும் தறுவாயில் குறித்த மரக்கூடார மேற்பகுதி திடீரென உடைந்து நொறுங்கி கீழே விழுந்தது.
அதனால் மேலே சாப்பிட்டுக்கொண்டிருந்த பலர் பலத்த கூக்குரலுடன் கீழே விழுந்தனர் அவர்களில் சுமார் 10 பேருக்கு காயங்கள் ஏற்பட்டமையால் உடனடியாக அக்கரைப்பற்று சைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருக்கிறோம் என்று கூறினார்.