நிஷா குழுவினருடன் த.தே.கூட்டமைப்பினர் சந்திப்பு



இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் நிஷாபிஷ்வால் மற்றும் உதவிச் செயலாளர்டொம் மெலினாவ்ஸ்கி ஆகியோருடன் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்
இக்கலந்துரையாடல் நிகழ்வு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின் போது, இலங்கையின் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இடம்பெற்றுவருகின்ற பல சீர்திருத்தங்கள் பற்றி பேசப்பட்டன.
இதன்போது அரசியலமைப்பு, சட்ட விவகாரம் மற்றும் பொறுப்பு கூறல் தொடர்பிலும், கடந்த ஆண்டுஇலங்கை அரசாங்கத்துடன் ஐக்கிய நாடுகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்மற்றும் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் நீண்டஉரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை அரசாங்கம் இந்த செயற்பாட்டில் வெற்றி காண்பதற்கு சர்வதேச பங்களிப்பும்அமெரிக்காவின் உதவியும் தொடர்ந்து இருக்கும் என நிஷா பிஷ்வால் மற்றும் டொம்மெலினாவ்ஸ்கி ஆகியோர் உறுதியளித்துள்ளனர்.