#துருக்கி: ராணுவ ஹெலிகாப்டரில் கிரீஸிற்குள் நுழைந்தவர்கள் யார்?



கிரீஸ் நாட்டிற்குள் துருக்கி ராணுவ ஹெலிகாப்டரில் நுழைந்த 8 பேரை கைது செய்திருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
சிறிது நேரத்திற்குமுன், அந்த ஹெலிகாப்டர் வட நகரமான அலெக்ஸாண்ட்ரூபோலிஸில் தரையிறங்கி உள்ளது.
அதில் வந்தவர்கள் கிரீஸில் அரசியல் தஞ்ச கோரிக்கை வைத்துள்ளார்கள்.
ஆனால், துருக்கிக்கு திருப்பி அனுப்பும்படி கோரப்போவதாக துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.