யானை தாக்கிப் பலி



அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆத்துக்கண்டம் வயல்வெளியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி தம்பிலுவில் கிராமத்தைச் சேர்ந்த 02 பிள்ளைகளின் தந்தையான மார்க்கண்டு குணரெட்ணம் (வயது 57) என்ற விவசாயி  பலியாகியுள்ளார். 

தனது வயலில் இரவு வேளைக் காவல் கடமையில் ஈடுபட்டுவிட்டு, இன்று திங்கட்கிழமை காலை வீடு திரும்ப இவர் முற்பட்டுக்கொண்டிருந்தபோதே, யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்