முகமது நபிகளை அவமதித்ததாக கடைக்காரரை கொன்றவருக்கு 27 ஆண்டுகள் சிறை



கடந்த மார்ச் மாதம், ஸ்காட்லாந்து நகரமான கிளாஸ்கோவில் இஸ்லாமிய கடைக்காரர் ஒருவரை கொலை செய்ததற்காக தன்வீர் அகமது என்ற 32 வயது நபருக்கு குறைந்தது 27 வருட சிறைத்தண்டனை வழங்கப்படுள்ளது.

கொலை செய்யப்பட்ட கடைக்காரரான அசாத் ஷா, முகமது நபிகளை அவமதித்தார் என்று தான் நம்பியதாக தன்வீர் அகமது தெரிவித்தார்.
அகமதியா என்ற சிறுபான்மை இஸ்லாமிய பிரிவின் உறுப்பினரான அசாத் ஷா, சமூகத்தில் பிரபலமான நபராக வாழ்ந்து வந்தார்.
தான் நடத்தி வந்த செய்தித்தாள் விற்பனை கடையில் அசாத் ஷா குத்திக் கொல்லப்பட்டார்.
முகமது நபிகள் தான் இறுதியான தூதர் என்பதை ஏற்றுக் கொள்வதில் பெரும்பான்மையான இஸ்லாமிய பிரிவினரிடமிருந்து அகமதியா இஸ்லாமிய பிரிவினர் மாறுபட்டுள்ளனர்.