கொழும்பின் பல பகுதிகளுக்கு 12 மணி நேர நீர்வெட்டு



கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு  இன்று 12 மணி நேரம் நீர் வெட்டு இடம்பெறும்.
மஹரகம, போரலெஸ்கமுவ, பன்னிப்பிட்டிய,கொட்டாவ, ஹோமாகம,பெலவத்த, மத்தேகொட, கொடகம, மீப்பே மற்றும் பாதுக்கை ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.
நாளை காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையான 12 மணி நேர காலப்பகுதியில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அவசர திருத்த வேலைகள் காரணமாக இந்த நீர்வெட்டு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.