ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பாதயாத்திரை தற்போது கொழும்பை வந்தடைந்துள்ளது.
கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாதயாத்திரை நிறைவுக் கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், காலி முகத்திடலுக்கு இப் பேரணி சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் குறித்த கூட்டத்தினை லிப்டன் சுற்றுவட்டத்தில் நடாத்துவதற்குரிய முன்னாயத்த நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார்.
மேலும், குறித்த பகுதியில் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதனை தடுக்கும் வகையில் அதிகளவான பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

