(ஏறாவூர்- முஹம்மது அஸ்மி)
சுஹதாக்கள் தினமும் -ஆவணப்படுத்தலின் அவசியமும்
---------------------------------------------------------------------
1990- ஆகஸ்ட் 12 ஏறாவூர் மக்களின் மனங்களில் அழியா வடுக்களை ஏற்படுத்திச் சென்ற துயரம் மிக்க நாள் - இன்றைய நாளில் தான் அப்பாவிகளான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் காரணமே இன்றி கொன்று குவிக்கப்பட்ட கரி நாள் -
அந்த வகையில் 26 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்று முகப்புத்தகம் எங்கும் அது தொடர்பான பதிவுகளே நிரம்பி வழியும் தருணத்தில் எனது மனதில் உள்ள ஆதங்கத்தை உங்கள் முன் வெளிப்படுத்திக் கொள்ள விழைகிறேன் -
உண்மையில் சுஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்படும் ஒவ்வொரு வருடமும் அன்றைய தினத்தில் அவர்களுக்காய் பிரார்த்திப்பதிலும் - கவிதைகளையும் படங்களையும் அனுபவங்களையும் பரிமாறிக் கொள்ளும் நாம் அத்தோடு எமது கடமை நிறைவு பெற்று விட்டதாக எண்ணி கடந்து செல்கிறோம் மீண்டும் அடுத்த வருடம் சுகாதாக்கள் தினம் வரும் போதே அது தொடர்பான கருத்தாடல்கள் வரும் போது எவராவது அது தொடர்பான தகவல்களை புகைப்படங்களை பகிரும் போது மட்டும் சுதாரித்து கொண்டு நாமும் அதை பகிர்ந்து கொள்கிறோம் - ஆனால் இந்த துயர சம்பவம் தொடர்பான முறையான முழுமையான ஆவணப்படுத்தல் என்ற விடயத்தில் ஏறாவூர் சமூகம் இன்னும் மிக்க பலவீனம் அடைந்த நிலையிலேயே 26 வருடங்களை கடத்தி உள்ளது என்ற கசப்பான உண்மையை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் -
உண்மையில் இலங்கையில் இடம்பெற்ற கொடூர யுத்தத்தில் எதிர்கொண்ட பாதிப்புக்களை - முழுமையாக ஆவணப்படுத்துவதில் எமது முஸ்லீம் சமூகம் கொண்டுள்ள பலவீனத்திட்கு முற்றுப்புள்ளி வைக்கா விட்டால் அடுத்த தலைமுறைக்கு இவ்வாறான துயர சம்பவங்களை கொன்டு சேர்க்கவே முடியாமல் போய் விடும் -
நவீன தொழிநுட்ப முறைகளும் - தொடர்பு சாதனங்களும் , தொடர்பாடல் முறைகளும் மேலோங்கிக் காணப்படும் இன்றைய காலத்தில் - எம்மோடு இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஆளுமைகளையும் அன்று களத்தில் நின்று களப்பணி புரிந்த அனுபவஸ்த்தர்களையும் நன்கு பயன்படுத்தி அவர்களிடம் உள்ள தகவல்களையும் சிதறிக் கிடக்கின்ற தகவல்களையும் தடயங்களையும் ஓன்று திரட்டி தற்போதைய நவீன ஆவணப்படுத்தல் பொறிமுறைகளுக்கு ஊடாக ஏறாவூரில் இந்த இரத்தம் தோய்ந்த வரலாற்று துயர சம்பவத்தை முழுமையாக ஆவணப்படுத்தும் செயட்பாட்டை இன்றைய இளம் சமுதாயமாகிய நாம் செயட்படுத்த முனையாவிட்டால் அடுத்த தலைமுறைக்கு இந்த வரலாறுகள் முழுமையாக மழுங்கடிக்கப்பட்டு விடும் சாத்தியமே தென்படுகிறது -
ஏனெனில் எமது ஆவணப்படுத்தலின் பலவீனத்திட்கு சான்றாக சுகதாக்கள் தினம் தொடர்பில் இன்றைய நாளில் இடப்படுகின்ற பதிவுகளை பார்க்கும் இடத்து இறந்தவர்களின் எண்ணிக்கையில் கூட ஒரு சரியான தகவல் எமது தலைமுறையை சென்றடையவில்லை என்பதை கணக்கு கூடியதாக இருக்கிறது , இறந்தவர் தொகை 113 எனவும் 121 எனவும் 126 எனவும் ஏன் 156 என்று கூட சிலர் பதிவிட்டு இருந்ததை காணக் கூடியதாக இருக்கிறது - இது முறையான ஆவணப்படுத்தலில் கடந்த காலத்தில் நாம் விட்ட பலவீனமான பக்கங்களையே எமக்கு புடம் போட்டுக் காட்டுகிறது .
அன்பின் ஏறாவூர் வாழ் சமூக முன்னோடிகளே ! பல்வேறு துறைகளில் குறிப்பாக ஆவணப்படுத்தும் பொறிமுறை செயட்பாடுகளில் கோலோச்சும் ஏறாவூர் வாழ் இளைஞ்சர்களே ! நம் அனைவர் மீதும் மிகப்பெரும் சமூக பொறுப்பு இந்த விடயத்தில் சுமத்தப்பட்டுள்ளது - இந்தக் காலகட்டத்தையும் வாய்ப்பையும் நாம் நன்கு பயன் படுத்தி அடுத்த சுஹதாக்கள் தினம் வருவதட்கு முன்னராவது ஒழுங்கமைக்கப்பட்ட பொறிமுறை ஒன்றின் ஊடாக இந்த சுகாதாக்களின் இரத்தம் தோய்ந்த வடுக்களை ஆவணப்படுத்துகின்ற செயட்பாட்டுக்கு எம்மை அர்ப்பணிக்க திட உறுதி பூளுவோம் -
பிறந்த மண்ணை நேசிக்கும் ஒரு ஏறாவூரானாக இந்த மண்ணில் சிந்தப்பட்ட இரத்த வரலாற்றை நவீன முறையில் முழுமையாக ஆவணப்படுத்தும் செயட்பாட்டை முன்னெடுங்கள் - உங்களின் தனித் தனித் திறமைகளை தயவு செய்து ஒருமுகப்படுத்தப்பட்ட ஆவணப்படுத்தல் செயட்பாட்டுக்காக பயன்படுத்த முன் வாருங்கள் -
அன்பின் ஏறாவூரின் சமூக முன்னோடிகளே ! உங்களால் சுமக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இரத்தம் தோய்ந்த வரலாறுகளையும் ஆவணங்களையும் - இன்றைய இளம் சந்ததிகளோடு பகிர்ந்து வரலாற்றை ஆவணப்படுத்தும் செயட்பாட்டை நீங்களே ! முன் கொண்டு நடை முறைப் படுத்துங்கள் - உங்களோடு தோளோடு தோள் நிற்க இளைஞ்சர்களாகிய நாம் காத்து நிட்கிறோம் -
உங்கள் வழி நடாத்தலை எதிர்பார்த்து ...

