திலகரத்ன டில்சான் ஓய்வுக்கு வந்தார்




அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி, 227 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது. 

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி இன்று தம்புள்ளை விளையாட்டரங்கில் ஆரம்பமானது. 

முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. 

இதன்படி அந்த அணியின் ஆரம்ப வீரர் தனுஷ்க குணதிலக ஐந்து ஓட்டங்களுடன் வௌியேறி அதிர்ச்சியளித்தார். 

இதனையடுத்து களத்தில் இருந்த டில்ஷானுடன் கைகோர்த்த குஷல் மென்டீஸ் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

இதேவேளை ஓய்வை அறிவித்துள்ள இலங்கையின் அதிரடி நாயகன் டில்ஷானுக்கு இது இறுதி சர்வதேச ஒருநாள் போட்டி என்பதால் இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அவர் களமிறங்கியிருந்தார். 

இந்தநிலையில், 42 ஓட்டங்களைப் பெற்றவேளை, ஆட்டமிழந்து, அரைச் சதத்தை டில்ஷான் தவறவிட்டார். 

எனினும், அவரது நிதான ஆட்டம் இலங்கை அணிக்கு வலுச் சேர்த்தது. 

மறுபுரம் வழமைபோல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் சந்திமால் 102 ஓட்டங்களை விளாசித் தள்ளினார். 

எனினும் ஏனைய வீரர்கள் அவ்வளவாக கைகொடுக்காததால், 49.2 ஓவர்களில், 226 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது இலங்கை. 

இதன்படி 228 என்ற வெற்றி இலக்கு அவுஸ்திரேலியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.