தொண்டமானின் ஜனன தினம்...



அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 103வது ஜனன தினம், இன்று செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி கொழும்பு பழைய நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில்,  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான்,  இ.தொ.கா தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் மற்றும் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்