அக்கரைப்பற்றில் தனியார் தொடர்பாடல் நிலையத்துக்கு தீ



(சுஹைப் உமறுலெப்பை)

அக்கரைப்பற்று மாநகர பிரதான வீதியில் அமைந்துள்ள Akkaraipattu Nation Trust Bank இற்கு அருகாமையில் அமைந்திருக்கும் Airtel ARJ Recharge Service நிலையத்திற்கு நள்ளிரவு சுமார் 02.30 Am மணியளவில் 2016.08.13 ஆம் திகதி சனிக் கிழமை இனந்தெரியாத நபர்களினால் கடைக்கு தீ வைத்திருப்பதாக பொதுமக்கள் பார்வை இட்டுக் கொண்டிருப்பதை, அப்பாதையினால் சென்ற போது இன்று காலை சரியாக 08.30 Am மணியளவில் நேரடியாக அவ்விடத்தை தள்ளி நின்று பார்வை இட்டேன்.

அக்கடைக்கு தீ இட்டவர்கள் இச்செய்தியை எழுதும் வரையில் இனம் காணப்படவில்லை. அக்கரைப்பற்று பொலிசார் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளதுடன், அக்கடைக்கான பாதுகாப்பினையும் தற்போது ஏற்பாடு செய்துள்ளனர். இதனுடன் தொடர்புபட்டவர்கள் விரைவில் கைதாவர் எனவும் எதிர்பார்க்கப்படுகின்து.