-ஏ.எச்.ஏ. ஹுஸைன் -
1990 ஆம் ஆண்டு ஏறாவூர் நகரிலும் அதனை அண்டிய கிராமங்களிலும் ஒரே இரவில் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தோர் மீது நடத்தப்பட்ட தாக்குலினால் படுகொலை செய்யப்பட்ட ஸுஹதாக்களின் (சொர்க்க வாசிகள்) 26வது நினைவு நிகழ்வு ஏறாவூர் மஸ்ஜிதுல் தாறுல் ஸலாமில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 12.08.2016 மாலை பிரார்த்தனைகளுடன் அனுஷ்டிக்கப்பட்டதாக ஏறாவூர் பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட் தெரிவித்தார்.
நினைவு நிகழ்வு தொடர்பான பிரார்த்தனை ஏற்பாடுகளை ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மேற்கொண்டிருந்தது.
1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11 ஆம் திகதி இரவு ஏறாவூரிலும் ஏறாவூரைச் சூழவுள்ள ஆற்றங்கரை, ஓட்டுப்பள்ளி, புன்னைக்குடாவீதி, ஐயங்கேணி, மீராகேணி, சத்தாம்ஹுஸைன் ஆகிய கிராமங்களிலும் 121 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
அதேவேளை அந்தப் படுகொலைத் தாக்குதலின்போது படுகாயமடைந்த பலர் பின்னாட்களில் சிகிச்சை பயனளிக்காமல் இறந்து போனார்கள். ஒட்;டுமொத்தமாக இச்சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 160 இற்கு மேல் என சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
படுகொலைக்குள்ளானவர்களினது ஜனாஸாக்கள் ஏறாவூர் காட்டுப்பள்ளி வாசலின் புறம்பான ஒரு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.
அங்குதான் வருடாவருடம் ஸுஹதாக்களின் (சொர்க்க வாசிகள்) நினைவு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
ஏறாவூர், காட்டுப்பள்ளிவாசலில் 26 ஆவது சுஹதாக்கள் நினைவுதின நிகழ்வுகள் இன்று அஸர் தொழுகையுடன் ஆரம்பித்து மஹ்ரிபுடன் நிறைவுக்கு வந்தது.
நிகழ்வுகளில் கிழக்கு மாகாண முதலமைச்சர் யெ;னுலாப்தீன் நஸீர் அஹமத், நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் முன்னாள் அமைச்சர் பஸீர் சேகுதாவூத் ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள், மார்க்க அறிஞர்கள், மற்றும் சமூகப் பிரமுகர்கள் உலமாக்கள், மத்ரஸா மாணவர்கள், ஊர்ப்பிரமுகர்கள் ஆகியோருட்ப கொல்லப்பட்ட குடும்பங்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

