தொழிற் பயிற்சியை முடித்த சிறைக்கைதிகளுக்கு சான்றிதழ்கள்





(NOORDEEN)
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தொழிற் பயிற்சியை முடித்த சிறைக்கைதிகளுக்கு கடந்த புதன்கிழமை சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபையினால் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருக்கும் 25 சிறைக்கைதிகளுக்கு ஆறு மாதகால மேசன் தொழிற்பயிற்சி வழங்கப்பட்டன.

இந்த பயிற்சியை முடித்த சிறைக்கைதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் கே.எம்.யு.எச்.அக்பர் தலைமையில் நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் என்.பிரபாகரன் மற்றும் தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.நழீம் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம நலன்புரி உத்தியோகத்தர் ஏ.விக்ரமசிங்க மற்றும் மட்டக்களப்பு சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்க செயலாளர் ஏ.பிரதீபன் தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் மட்டக்களப்பு இணைப்பாளர் றுக்ஸன் மற்றும் அல்கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எம்.ஹாறூன் உட்பட சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


 மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் என்.பிரபாகரன் இதன் போது கருத்து தெரிவிக்கையில் சிறைத்தண்டணைக்காலம் நிறைவடைந்து வெளியில் சென்று தாம் பெற்ற தொழிற்பயிற்சியை வைத்து தொழிலை செய்து தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல இதன் மூலம் வழி ஏற்பட்டுள்ளது.
 சிறைக்கைதிகளின் புனர்வாழ்வு மற்றும் அவர்களுக்கான தொழிற்பயிற்சி என்பவற்றில் சிறைச்சாலை திணைக்களம் கவனம் செலுத்தி வருகின்றது.
 சிறைக்கைதிகளின் நன்மைகளில் மேலதிக கவனத்தையும் சிறைச்சாலை திணைக்களம் கவனம் செலுத்தி வருகின்றது.

நல்ல பிரஜைகளை உருவாக்க சிறைச்சாலைகள் பங்களிப்பு செய்கின்றன. அந்த வகையில் நாம் சிறைக்கைதிகளுக்கான தொழிற்பயிற்சியையும் வழங்கி வருகின்றோம் என்றார்.