கிரிக்கட் போட்டியை பார்வையிட முடியா ரசிகர்கள் கொந்தளிப்பு



தம்புள்ளை சர்வதேச விளையாட்டரங்கில் தற்போது இடம்பெற்று வரும் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 4ஆவது ஒரு நாள் கிரிக்கட் போட்டியை பார்வையிட வந்த ரசிகர்கள் நுழைவுச்சீட்டு கிடைக்காமல் கொந்தளித்து வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
நுழைவுச்சீட்டு கிடைக்காத பார்வையாளர்கள் அருகில் இருந்த சுவர்களில் ஏறியும் கூச்சலிட்டும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அத்தோடு தம்புள்ளையினூடான குருநாகல் கொழும்பு போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முடியாது போன நிலையில் கண்ணீர்ப்புகை பிரயோகிக்கப்பட்டுள்ளது.