பட்டதாரிப் பெண்களுக்கான புலமைப் பரிசில்



(அஷ்ரப் ஏ சமத்)

இந்த நாட்டில் 100க்கு 53 வீதமான  பெண்கள் உள்ளனா்.  இந்த நாட்டில்  கூடுதலான பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் சென்று  ஒரு வருடத்தில் மட்டும் இலங்கையிற்கு   7 பில்லியன் அமேரிக்க டொலா் அன்னியச் செலவாணியை உழைத்து  அனுப்புகின்றனா்.   என அமைச்சா்  கலாநிதி சரத்அமுனுகம தெரிவித்தாா்.

 பல்கழைக்கழகங்களில் கற்ற பெண்கள் அமைப்பினர்   நாட்டில்  உள்ள 14 பல்கலைக்கழககங்களில் இருந்தும் தெரிபு செய்யப்பட்ட 84 பெண் பட்டதாரிகளுக்கு புலமைப்பரிசில் திட்டம் ஒன்றை இன்று(31) வழங்கி வைத்தனா். 

இவ் நிகழ்வு பொரளையில் உள்ள இவ் அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சா் கலாநிதி  மேற்கண்டவாறு தெரிவித்தாா்.

அமைச்சா் அங்கு  தொடா்ந்து உரையாற்றுகையில் 

அதுமட்டுமல்லாமல்  இந்த நாட்டில் உள்ள சகல ஆடைத்தொழிறசாலைகளிலும்  கூடுதலான பெண்களே தொழில் செய்து ஆடை ஏற்றுமதியில் உழைக்கின்றனா். அத்துடன் தேயிலை இறப்பா் தொழிலிலும் பெண்களே தொழில் செய்து தேயிலை இறப்பா் ஏற்றுமதியிலும் உழைக்கின்றனா்.  ஆனால் அவா்களுக்கு உரிய அரசியல் பிரநிதித்துவம் பிரதேச சபைகள் தொட்டு பாராளுமன்றம் வரை இது வரை கிடைக்க வில்லை எதிா்வரும் பிரதேச மற்றும் உள்ளுராட்சித்  தோ்தல்களில்  25 வீதம் போட்டி போடாமலே பெண்  பிரநிதித்துவம் கிடைக்க உள்ளது.  

நான் பல்கலைக்கழகத்தில்  கற்கும் காலத்தில்  3 ஆனுக்கு ஒர் பெண் என்ற ரீதியில் கல்வி கற்றாா்கள். ஆனால்த தற்பொழுது சகல துறைகளிலும்   அரைவாசிக்கு  அரைவாசியாக   பெண்கள் உள்ளனா்.  உலகமயமாக்களில் சரி சமனாக பெண்கள் இருக்க வேண்டும் என உலக மிலேணியம் குலோபல் ஸ்தாபாணம் தெரிவிக்கின்றது. எதிா்வரும் காலத்தில் பெண்கள்  பாராளுமன்றம், மகாண சபை மாநகர சபைகளில் அரசியல்  பிரநிதித்துவம் 25 வீதம் வழங்கப்படும் . அதனை அந்தநத் அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேசிய பட்டியல் ரீதியில் நியமனம் பெறுவா் என அமைச்சா் அங்கு உரையாற்றினாா்